ETV Bharat / state

Jewellery robbery: கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை - 3 பேர் கைது - நகை பணம் கொள்ளை

Jewellery robbery: காஞ்சிபுரத்தில் பெண்களிடன் கத்தியை காட்டி மிரட்டி 44 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Jewelry robbery
Jewelry robbery
author img

By

Published : Dec 28, 2021, 6:27 PM IST

காஞ்சிபுரம்: Jewellery robbery: மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகேவுள்ள மாருதி நகரில் வசித்து வருபவர், ஆடிட்டர் மேகநாதன்.

இவருக்கு பாலகிருஷ்ணன் உள்பட இரு சகோதரர்கள் உள்ளனர். சகோதரர்களான மூவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். மேகநாதன் சகோதரர்கள் இருவரும் அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல அவர்கள் கடந்த 23ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் 3 சகோதரர்களின் மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது, மதியம் ஒரு மணியளவில் திடீரென அந்த வீட்டில் முகமூடி அணிந்த 3 நபர்கள் கத்தியுடன் நுழைந்துள்ளனர். சற்றும் எதிர்பாராத பெண்கள் மூவரும் கூச்சலிடத் தொடங்கியபோது கையிலிருந்த ஆயுதங்களைக் காட்டி மூன்று பேரையும் மிரட்டியுள்ளனர்.

சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் உள்பட வீட்டில் இருந்த சுமார் 44 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாட்டிய கொள்ளையர்கள்

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வந்தநிலையில் பாலகிருஷ்ணனின் தங்கை மகனான சந்தானகிருஷ்ணன் என்பவர் மீது காவல் துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உல்லாச வாழ்க்கைக்குப் பணம் தேவைப்படும் என்பதற்காக சொந்த தாய்மாமன் வீட்டில்
தனது நண்பர்கள் கௌதம், சிவகுமார் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. தொடர்ந்து, கொள்ளையடித்துவிட்டு வீட்டில் நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதன் பின் மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 44 சவரன் நகைகள், ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 31 கிராம் வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்து, அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.