கோவூர், மேற்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(37), இவர் சொந்தமாக லாரிகள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். மேலும் முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மனைவி உஷா, இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஏப்-29ஆம் தேதி தனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மோகனாம்பாள் wife who killed her husband காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் மாங்காடு காவல் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரது வீடு வெளிப்புறம் பூட்டி இருந்தால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒருவித துர்நாற்றம் வீசியது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் உஷா ஒரு மூட்டையை எடுத்துச் சென்று அருகில் உள்ள குளத்தில் வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த மூட்டையை எடுத்து பார்த்தபோது அதில் ரத்தக்கறை படிந்த தலையணை, பெட்சீட் இருப்பது தெரியவந்தது.
மேலும் பாஸ்கரை ரத்த காயங்களுடன் காரில் ஏற்றி செல்வதும் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று(மே 1) காலை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் காணாமல்போன பாஸ்கரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்கரின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், பாஸ்கருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்தை அபகரிக்கும் நோக்கில் உஷா மற்றும் அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை வீட்டிற்குள்ளேயே அடித்துக்கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருப்பதும், கொலையை மறைக்க ரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மற்றும் தலையணைகளை எடுத்து சென்று குட்டையில் வீசி விட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடித்து விட்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள பாஸ்கரின் மனைவி அவரது அண்ணன் பாக்கியராஜ் ஆகியோரை காலவ்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற உஷா வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள், லாரி சாவிகள், கார் சாவி, நகைகளை எடுத்துச் சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் மாங்காடு காவலதுறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.