காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை முடக்கவும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கிவந்த பூ வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அப்பகுதியில் வியாபாரம் செய்ய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தடைவிதித்தார்.
அதையடுத்து பூ வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்காத வண்ணம் அருகில் உள்ள பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டு இன்றுமுதல் அங்கு தற்காலிக பூ வணிக வளாகத்தை பூ வியாபாரிகள் அமைத்துள்ளனர்.
மேலும் பள்ளி மைதானத்தை தங்களின் முதலீட்டைக் கொண்டு வழிகாட்டித் தடுப்புகள் அமைத்து நாளைமுதல் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பூ வியாபாரத்தில் முழுமையாக மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் நாளைமுதல் தற்காலிக பூ வணிக வளாகம் - Temporary flower market
காஞ்சிபுரம்: பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கிவந்த பூ வணிக வளாகங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அப்பகுதியில் வியாபாரம் செய்ய மாவட்ட ஆட்சியர் தடைவிதித்ததால் அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் தற்காலிக பூ வணிக வளாகத்தினை பூ வியாபாரிகள் அமைத்து நாளைமுதல் செயல்படுகிறது.