காஞ்சிபுரம்: மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
இங்கு வாரணவாசி பகுதியைச் சேர்ந்த துளசிதாஸ் (43), கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த ராமு (34) ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று (அக்.4) இரவு டாஸ்மாக் கடையைப் பூட்டிவிட்டு துளசிதாஸ், ராம் ஆகிய இருவரும் கிளம்பினர்.
அங்கு மறைந்திருந்த சில நபர்கள் துளசிதாஸை கத்தியால் கடுமையாகத் தாக்கினர். இதைத் தடுக்க வந்த ராமையும் கத்தியால் குத்தி உள்ளனர்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலை
இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் காவல் துறையினர், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராமை மீட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய நபர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மண உறவைத் தாண்டிய காதல்: கட்டட வேலை செய்யும் பெண்ணை கட்டையால் அடித்து நகை பறிப்பு