ETV Bharat / state

கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்! - எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் மோதல்

காஞ்சிபுரம்: பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கியுடன் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்

author img

By

Published : Feb 4, 2020, 9:22 PM IST

சென்னையை அடுத்த காட்டாங்களத்தூர் அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் தனியார் கல்லூரி. இங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர்.

இருதரப்பு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பதை, அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

துப்பாக்கியுடன் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செல்போனில் பதிவான காணொளி காட்சிகளை வைத்து மாணவர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவரம் காட்டிவருகின்றனர்.

இதேபோல், கடந்த ஆண்டும் ஒரு ரவுடியின் பிறந்தநாள் விழாவை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்து நீளமான பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமும் இக்கல்லூரியில் அரங்கேறியுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் கல்லூரி மாணவன் முகேஷ் என்பவரை அவரது நண்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் ஒருபுறம்.

முன்பெல்லாம் ரவுடிகளின் கைகளில் வலம்வந்த கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்கள் இடையே சுலபமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் கையில் எவ்வாறு துப்பாக்கி வந்தது, மாணவர்களுக்கு, ரவுடிகளுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து தகராறு: மகனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை

Intro:சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்களுக்குள் இன்று உள்ளே மோதல் ஏற்பட்டது.
Body:இரு தரப்பினர் மாணவர்கள் மோதிக் கொண்டதில் கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவம் அந்த கல்லூரியில் இருந்ததாக மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து தற்போது வைரலாக வெளிவந்ததால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கல்லூரிகளுக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டும், இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த வருடம் ஒரு ரவுடியின் பிறந்தநாள் விழாவை கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருசக்கர வாகனம் மீது வைத்து பெரிய கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமும் இந்த கல்லூரியில் அரங்கேறியுள்ளது. இதேபோல் கடந்த வருடம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் முக்கேஷ் என்பவரை அவருடைய நண்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இந்த பகுதியில் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து துப்பாக்கி சுலபமாக அனைவரது கையிலும் கிடைக்கின்றது என்பது இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.
ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்களிடையே சுலபமாக கிடைப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றன. Conclusion:முறையாக அனுமதி பெறாமல் முறைகேடாக கள்ளத்தனமாக துப்பாக்கிகள் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்கள் கையில் துபாக்கி வந்தது எப்படி என்பதெல்லாம் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.