ETV Bharat / state

Video Leak... காவல் நிலைய வாசலிலேயே பெண்ணைத்தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர்... - சக காவலர்கள் முன்னிலையில்

காஞ்சிபுரம், பெருநகர் காவல் நிலைய வாசலிலேயே சக காவலர்கள் முன்னிலையில் பெண் ஒருவரை சிறப்பு உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 26, 2022, 3:12 PM IST

Updated : Aug 29, 2022, 4:06 PM IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார்குளம் பகுதியைச்சேர்ந்தவர், பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராகப் பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரம், என்பவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல் துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும், கூறப்படுகிறது. மேலும் காவலர் சோமு வீட்டிற்குச்சென்று பிரியா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் காவலராக இருந்து வந்த சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அலுவலர்கள் கவனத்திற்கு வந்ததால் அவரை, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

மேலும் பிரியா அடிக்கடி சோமசுந்தரத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், சோமசுந்தரம் அந்தப்பெண்ணின் உறவினரிடம், பிரியாவை பற்றி கூறியதாகத் தெரிகிறது. இதனால் பிரியா சோமசுந்தரத்தின் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியா, அவரைத் தேடி பெருநகர் காவல்நிலையத்திற்கு வந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே, சககாவலர்கள் முன்னிலையில் பிரியாவை தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையமே பரபரப்பாக மாறியது.

இந்தச்சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது வாசலிலேயே சக காவலர்கள் முன்னிலையில் பெண் ஒருவரை சிறப்பு உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இதுகுறித்து அறிந்த காவல்துறை உயர் அலுவலர்கள் பெருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய சோமசுந்தரத்தை, தற்போது ஆயதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் நிலைய வாசலிலேயே பெண்ணைத்தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர்

மேலும் காவலர் தாக்கிய பெண்மணியான பிரியா, ’நான் போலீஸ்காரன் பொண்டாட்டி’ என அசைவ உணவகம் ஒன்றில் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஒருதலை காதலால் விபரீதம்...16 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞன்

Last Updated : Aug 29, 2022, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.