காஞ்சிபுரம்: Kanchipuram: மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்டப் பகுதிகளில் செல்போன்களை தொலைத்தவர்கள் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் முழுவதும் தொலைந்துபோன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்க காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர், பல்வேறு யுக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு, சுமார் 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 217 செல்போன்களை கண்டுபிடித்து மீட்டனர்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் கண்டுபிடித்து மீட்கப்பட்ட செல்போன்களை இன்று (டிச.24) காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: அலைக்கழித்த குடிபோதை காவலரின் மண்டை உடைப்பு: டெலிவரி பாய் கைது