காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பிரபல நிதிநிதி நிறுவனத்தில் முகவராக செயல்பட்டு வந்த அவர் அதேப்பகுதி மக்களிடம் இருந்து லட்சக்கணாக்கான ரூபாய்களை பெற்று அந்த நிறுவனத்தில் செலுத்திவந்தார். இதனிடையே அந்த நிதி நிறுவனம் மோசடி வழக்கில் சிக்கியது. இதனால், முதலீடு செய்த மக்கள் விஜயபாஸ்கர் வீட்டுக்கு சென்று பணத்தை திரும்ப கேட்டுவந்தனர். சிலர் தகாத வார்த்தைகளால் திட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவரது தாய் செண்பகம் 2 வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) விஜயபாஸ்கரும் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் விஜயபாஸ்கருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெரினா கடலில் மூழ்கிய 10 வயது ஆந்திரா சிறுமியைத் தேடும் பணி தீவிரம்