காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஆர்ப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செயல்படும் எம்-சாண்ட் தொழிற்சாலையின் கழிவுகளை, அதன் நிர்வாகத்தினர் அப்பகுதி புறம்போக்கு நிலங்களில் கொட்டி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பல லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து செய்யப்பட்ட ரெட்டேரி ஏரியிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் ரெட்டேரி ஏரி வறண்டு போய் விட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திடீரென தொழிற்சாலையை இன்று (டிச.28) முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டக்காரர்களிடம், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: குரங்குகளின் சரணாலயமாக மாறிய சட்டப்பேரவை அலுவலகம்!