செங்கல்பட்டு மாவட்டம் நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் நேற்று இரவு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இயந்திரம் வைப்பதற்கான கட்டுப்பாட்டு அறை வைத்து சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து இயந்திரங்களைப் பாதுகாப்பதற்காக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது