காஞ்சிபுரத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஹோட்டல்கள் மட்டுமே இரவு 8 மணி வரை செயல்படலாம். அதேபோன்று செயல்படும் அனைத்து கடைகளிலும் பொது மக்கள் தகுந்த இடைவெளியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த பல்பொருள் அங்காடி கடையில் தகுந்த இடைவெளி இல்லாமல் இயங்கி வந்த கடைக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதேபோன்று காஞ்சிபுரம் காந்தி ரோடு சாலையில் செயல்பட்டு வந்த துணிக்கடை ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.
முறையாக தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத மேலும், மூன்று கடைகளுக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி ஆகியோர் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: 'பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்போது வாய்ப்பில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்