ETV Bharat / state

காஞ்சியில் சசிகலாவிற்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு: கூட்டத்தில் தொண்டனின் ரூ.30,000 திருட்டு! - kanchipuram district news

காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சசிகலாவிற்கு அவரது தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க மலர்த்தூவி வரவேற்றனர்.

சசிகலாவிற்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு

author img

By

Published : Feb 9, 2021, 11:56 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். நேற்று (பிப். 8) காலை சுமார் 7.30 மணி அளவில் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சாலை மார்க்கமாக அவர் பயணம் மேற்கொண்டார்.

அதையொட்டி பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த ஏராளமான அதிமுக, அமமுக கட்சியினர் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சசிகலாவை வரவேற்பதற்கு நேற்று காலை பத்து மணிக்கு ஏராளமான அவரது தொண்டர்கள் குவிந்தனர்.

பின்னர் அவர் வந்தவுடன் மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் மலர்த்தூவி வரவேற்றனர். அதன்பின் சசிகலா நேற்றிரவு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார்.

மேலும் சசிகலாவை வரவேற்பதற்காக காஞ்சிபுரம் அமமுக நிர்வாகி ஜே.கே.ஜி. சதிஷ் என்பவர் தனது மனைவியின் நகையை அடகுவைத்து ரூ.30 ஆயிரம் பணம் வைத்திருந்தார். கூட்டத்தில் அவரது பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். உடனே காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

சசிகலாவிற்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு

சசிகலாவின் வருகையை ஒட்டி பொன்னேரிக்கரை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: அதிமுகவை கதிகலங்க வைக்கிறதா சசிகலா வருகை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.