தமிழ்நாட்டின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இங்குள்ள கோயில்களில் தரிசிப்பதற்கும் பட்டுச் சேலைகளை வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் காஞ்சிபுரத்திற்கு வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதனைப் புதுப்பிக்கும் பணிக்காக காஞ்சிபுரம் பெருநகராட்சி 2019 டிசம்பர் 18ஆம் தேதியன்று டெண்டர் விடப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் புதிய சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலைகள் அமைக்கும் பணியை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன் தலைமையில் பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பெரியார் நகரில் காமாட்சி நகர், சோமசுந்தரம் நகர், புவனகிரி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தேனம்பாக்கம், செவிலிமேடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நகரின் மத்தியில் உள்ள தாமல்வார் தெரு போன்ற பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்.!