காஞ்சிபுரம்: 14 காவல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்தாண்டு மட்டும் 109 சரித்திர பதிவேடு ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 35 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தைச் சேர்ந்த ரவடிகள், PPGD சங்கர் மற்றும் படப்பை குணா ஆகியோர் தாங்கள் திருந்தி வாழ நினைப்பதாகவும், தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் என உயர் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்ததை பரிசீலனை செய்து, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு முன்னிறுத்தி அவர்களை ஓராண்டிற்கு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், 14 காவல் நிலையங்களில் உள்ள 246 சரித்திர பதிவேடு ரவுடிகளை எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க வருவாய் கோட்டாட்சியர் முன்பு முன்னிறுத்தி அவர்களிடமிருந்து ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது.
நன்னடத்தையில் பிணை பெறப்பட்ட ரவுடிகள் மீண்டும் நன்னடத்தை பிணையை மீறி ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற நேரிடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு இன்று (பிப்.4) படப்பை குணா முன்னிறுத்தப்பட்டார். படப்பை குணா, தான் நன்னடத்தை ஆக இருக்கிறேன் என 110இன்கீழ் எழுதிக் கொடுத்ததை மீறியதால், தொடர்ந்து மூன்று நாள்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முன்பு படப்பை குணாவை முன்னிறுத்த நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் படப்பை குணா இன்று முன்னிறுத்தப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்தர், படப்பை குணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதியன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 17ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலையில் ரவுடி படப்பை குணா சரணடைந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!