காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் கட்டிவைக்காமல் இருந்து வருவது வாடிக்கையான ஒன்று. இவர்களின் இந்த அலட்சியத்தால் அவ்வப்போது பசுமாடுகள் ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிவருகின்றன.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தேசிய நெடுஞ்சாலையில் உரிமையாளர்களால் கட்டிவைக்கப்படாமல் விடப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையோரம் படுத்திருந்தபோது, அவ்வழியே வந்த வாகனம் பசுமாடுகள் மீது மேதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.