ETV Bharat / state

Flood - குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 2,112 வீடுகளை வழங்க கோரிக்கை - காஞ்சிபுரம் செய்திகள்

வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் தவிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம், ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 2,112 வீடுகளை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
author img

By

Published : Dec 1, 2021, 5:14 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி என்ற மூன்று ஆறுகள் பாய்கின்றன. இதில் காஞ்சியை அடுத்த கிளார் பகுதியிலிருந்து வேகவதி ஆறானது உற்பத்தி ஆகி, காஞ்சிபுரம் நகர்பகுதி, அய்யம்பேட்டை வழியாக சென்று திருமுக்கூடல் பாலாற்றில் சங்கமிக்கின்றது.

காஞ்சிபுரம் நகர்ப் பகுதியில் வேகவதி ஆற்றின் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பினால் சுருங்கி போயும், சில இடங்களில் ஆறு இருக்கும் இடமே தெரியாத நிலையிலும் இருந்தன.

மேலும், வேகவதி ஆற்றங்கரையோரம் பொதுப்பணித்துறை கணக்கெடுப்பில் சுமார் 1400-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளாக உள்ளன.

இந்நிலையில் தற்போது பெய்துவரும் வடக்கிழக்குப் பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பெய்து வரும் கன மழையையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் உட்பட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, உபரி நீரானது வெளியேறி வருகிறது.

வெள்ளப்பெருக்கானது வேகவதி ஆறு

திடீர் வெள்ளப்பெருக்கு - வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

அவ்வகையில் நவ.29 ஆம் தேதி நள்ளிரவு வேகவதி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீரானது, ஆர்ப்பரித்து செல்லத் தொடங்கியது.

திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வேகவதி ஆற்றங்கரையிலுள்ள ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனையெடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கக்கூடிய தாயார் அம்மன் குளம் அருகே சாலையில் இருந்த தரைப்பாலம், நாகலுத்து தரைபாலங்கள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டு, வெள்ளநீர் வெளியேற வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, ராட்சத மோட்டார் உதவியுடன் வீடுகள் மற்றும் வீதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வேகவதி ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் என அப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தி இருந்தும், மக்கள் யாரும் தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், நவ.29 ஆம் தேதி இரவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாலான வீடுகளில் நீர் சூழ்ந்துள்ளது.

குடிசை மாற்று வாரியம் - வீடுகளை ஒப்படைக்கும் பணியில் தொய்வு

மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கீழ்கதிர்பூர் கிராமத்தில் 17 ஏக்கர் இடத்தைத் தேர்வு செய்து, ரூ.150 கோடி மதிப்பில் 2,112 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியான நிலையில், வீடுகளை ஒப்படைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள மாற்று குடியிருப்புகளுக்கும் செல்ல தொடர்ச்சியாக மறுத்து வருவதால், மழைக் காலங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற, வீடுகளை விரைந்து ஒப்படைப்பதனால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பர். எனவே, அதுகுறித்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

இதையும் படிங்க: மொழி கடந்து வென்ற 'ஜெய்பீம்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.