ETV Bharat / state

சிற்றுண்டியில் ஆம்லெட் போட்டு வாக்கு சேகரிப்பு: திமுக வேட்பாளர்

காஞ்சிபுரம்: ராஜாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள சிற்றுண்டியில் ஆம்லெட் போட்டு கொடுத்து பொதுமக்களிடம் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் வாக்கு சேகரித்தார்.

சிற்றுண்டியில் ஆம்லெட் போட்டு  வாக்கு சேகரிப்பு

author img

By

Published : Apr 2, 2021, 2:35 PM IST

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாம் முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன் நாள்தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டி வாக்கு சேகரித்தார்.

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மார்க்கெட் பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி எழிலரசன், வியாபாரிகளிடம் தான் வெற்றிபெற்றால் மார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார் .

மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் அமர்ந்து பொதுமக்களுக்கு காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்தார் . இதை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள ஓர் சிற்றுண்டி கடைக்கு சென்ற அவர் அங்கிருக்கும் பொதுமக்களிடம் உரையாடி பொதுமக்களுக்கு ஆம்லெட் போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் மருமகன் வீட்டில் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.