ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலைப் பணியாளர்கள் சாலை மறியல் - சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

காஞ்சிபுரம் : சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை பணியாளர்கள்சாலை மறியல்

author img

By

Published : Aug 7, 2020, 5:59 PM IST

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கண்ணாடித் தொழிற்சாலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்தக்கோரியும், தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்தும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலைப் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலைத் தொடர்ந்து ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.