ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முத்து விழா! - birthday

காஞ்சிபுரம்: பாமக நிறுவனர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாளையொட்டி, அக்கட்சி சார்பில் அவருக்கு முத்து விழா கொண்டாடப்பட்டது.

birthday celebration
author img

By

Published : Aug 8, 2019, 9:51 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் பாமக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 80வது பிறந்த நாள், முத்து விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநில பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார்.

அப்போது பேசிய அவர், ’108 அவசர உதவி ஆம்புலன்சை அமல்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி, அதுமட்டுமல்லாமல் 107 இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததும் இக்கட்சி. மதுவை ஒழிப்பதற்காக அதிக அளவில் போராட்டங்களை நடத்தி உள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்றார்.

அதன் பிறகு பேசிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எதிரொலி மணி, தாழ்த்தப்பட்ட இனத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை சுடுகாடு வரையும் எடுத்துச் சென்று அடக்கம் செய்ததற்கு சமூக நீதி என்ற பட்டத்தை ராமதாஸூக்கு கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவில் மருத்துவம் பார்த்து தற்போது இலவசமாக மருத்துவமனையில் மருத்துவம் வழங்கும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ் என்று புகழாரம் சூட்டினார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 80வது பிறந்த நாள் முத்து விழாவாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் மாநில பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து உரையாடினார்

Body:108 அவசர உதவி ஆம்புலன்சை அமல்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அதுமட்டுமில்லாமல் 107 இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே நாட்டிலுள்ள மதுவை ஒழிப்பதற்காக அதிக அளவில் போராட்டங்களை நடத்தி உள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி இதுபோன்று பாட்டாளி மக்கள் கட்சியில் வரலாற்று சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்று திருக்கச்சூர் ஆறுமுகம் அவர்கள் உரையாடினார் அதன் பிறகு உரையாடிய எதிரொலி மணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமதாஸ் அவர்கள் சமத்துவ தலைவர் தாழ்த்தப்பட்ட இனத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை சுடுகாடு வரையும் எடுத்துச் சென்று அடக்கம் செய்ததற்கு சமூக நீதி என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் குறைந்த அளவில் மருத்துவம் பார்த்து தற்போது இலவசமாக மருத்துவமனையில் மருத்துவம் வழங்கும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்று ராமதாஸ் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்

Conclusion:இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியில் கலந்து கொண்டு அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர் பிறகு நிகழ்ச்சியின் முடிவாக பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.