ETV Bharat / state

பா. ரஞ்சித், வைரமுத்து சாதி கலவரத்தை தூண்டுகின்றனர் - ஹெச். ராஜா

காஞ்சிபுரம்: சாதி கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பதே இயக்குநர் பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களின் நோக்கம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 26, 2019, 6:41 PM IST

h. raja

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதரை தரிசனம் செய்ய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தன் குடும்பத்துடன் வந்திருந்தார். சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா. ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்கமாட்டார். ராஜராஜசோழன் காலத்தில் தனி உடைமை, நிலவுடைமை என்பது கிடையாது. தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது.

சமண மதத்தில் தண்டனை இல்லை என்பதால் கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், உயிரைக் கொன்று உண்பவர்கள் ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது. எனவே ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை என்பது இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளுடைய சதியின் ஒரு பகுதி.

செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா

இயக்குநர் பா. ரஞ்சித் இந்து கிடையாது என நான் ஆதாரங்களோடு சிலவற்றை சமர்ப்பித்தால் சிலருக்கு கோபம் வருகிறது. இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டி அதில் சாதி கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதே பா.ரஞ்சித், வைரமுத்து போன்றவர்களின் நோக்கம். எனவே ரஞ்சித்தின் செயலானது மதமாற்றத்தின் ஒரு பகுதியாகும்' என்றார்.

Intro:இயக்குனர் பா ரஞ்சித் வைரமுத்து போன்றவர்களுடைய நோக்கமே இந்து சமுதாயத்தில் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பதே ஆகும் H ராஜா காஞ்சிபுரத்தில் பேட்டி

Body:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதரை தரிசனம் செய்ய H ராஜா தன் குடும்பத்துடன் வந்திருந்தனர் சாமி தரிசனம் செய்த பிறகே செய்தியாளர்களை சந்தித்த ராஜா கூறியதாவது

ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார் சரித்திர ஆதாரங்களோடு ராஜராஜசோழன் காலத்தில் தனி உடமை நிலவுடைமை என்பது கிடையாது ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாச்சேரி என்கின்ற ஒன்றும் இருந்தது தீண்டாமை என்பது சமண மதம் வந்த பிறகுதான் உருவானது சமண மதத்தில் தண்டனை என்பது கிடையாது அதனால் கொலை செய்பவர்கள் கற்பழித்தவர்கள் உயிரை கொன்று உண்பவர்கள் போன்றவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருந்தார்கள் இந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது எனவே ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை என்பது இருந்திருக்க வாய்ப்பே கிடையாது இது திட்டமிட்டு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளின் சதியின் ஒரு பகுதி இயக்குனர் ரஞ்சித் இந்து கிடையாது நான் ஆதாரங்களோடு சில விஷயங்களை சமர்ப்பித்தால் சிலருக்கு கோபம் வருகிறது.Conclusion:பா.ரஞ்சித் வைரமுத்து போன்றவர்களுடைய நோக்கமே இந்து சமுதாயத்தில் சண்டையை மூட்டி அதில் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் மத மாற்றம் செய்ய வேண்டும் என்பதே நோக்கமாகும் எனவே ரஞ்சித்தின் செயலானது மதமாற்றத்தில் ஒரு பகுதியாகும் என காஞ்சிபுரத்தில் எச் ராஜா பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.