தமிழ்நாடு முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இன்று (ஜூன்.07) முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், எலக்ட்ரிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், சாலையோரக் கடைகள் ஆகியவை காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து அத்தியாவசிய பொருள்கள், காய்கறி சந்தைக் கடைகளும் காலை ஆறு மணி முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் பொருள்களை வாங்க கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் வெளியே வரத் தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு தளர்வு - காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!