சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுத்தலின்படி தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்ய பகுத்தறிவுப் பாதையில் நடை போடவைக்க கழக இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.பல மாவட்டங்களிலும் ஆன்லைன் சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டதில், லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.
அந்த வகையில், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாமை காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் உத்திரமேரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. சுந்தர் தொடங்கிவைத்தார்.
இதில், மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடு ஏழுமலை, பொருளாளர் டி.வி. கோகுலகண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி, நகர செயலாளர் குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஜியாவுதீன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜே.யோகானந்த் காதி மோகன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.