ETV Bharat / state

’ஜூன் மாதத்திற்குப் பிறகு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ - மத்திய அமைச்சர் தான்வே ராவ்சாஹிப் தாதாராவ் !

காஞ்சிபுரம்: ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தான்வே ராவ்சாஹிப் தாதாராவ் தெரிவித்தார்.

danve-raosaheb-dadarao
danve-raosaheb-dadarao
author img

By

Published : Jan 12, 2021, 4:36 PM IST

புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தான்வே ராவ்சாஹிப் தாதாராவ் இன்று குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இத்திட்டம் உள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ஒரு தமிழ் குடிமகன் மகாராஷ்டிராவில் ரேஷன் பொருள்களை பெறலாம். வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு கிடைக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச உள்ளேன் என தெரிவித்தார். அதையடுத்து அவர், "தங்க நகைகளின் உண்மைத்தன்மையை ஏழை, எளிய மக்களும் அறிந்துகொள்ள பரிசோதனை கூடத்தினை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கக்கூடிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளில் என்.பி.எச்.எச். முறையை ரத்து செய்யக் கோரி குமரியில் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.