ETV Bharat / entertainment

படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவு வசூலை குவிக்கும் ’அமரன்’... ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போகுமா? - AMARAN OTT RELEASE

Amaran OTT release: அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், ஓடிடி வெளியீடு ஒரு வாரம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் போஸ்டர்
அமரன் போஸ்டர் (Credits - Raaj Kamal Films International X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 12, 2024, 5:30 PM IST

சென்னை: ’அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த ’அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது.

மறைந்த முன்னாள ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலர் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். அமரன் திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

ரஜினி, கமல், விஜய்க்கு பிறகு 200 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் வரிசையில் அமரன், கோட் படத்திற்கு பிறகு இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

அமரன் திரையரங்குகளில் வசூலை வாரி குவித்து வரும் நிலையில், ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது அனைத்து தமிழ் படங்களும் திரையரங்குகளில் ஓடி குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: 'கங்குவா' வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்; தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே பேச்சுவார்த்தை!

இந்நிலையில் அமரன் திரைப்படம் தியேட்டர்களில் நன்றாக ஓடி வரும் நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைக்க விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.