ETV Bharat / state

"போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயம்?" தமிழக அரசுக்கு சிஐடியு பகிரங்க எச்சரிக்கை! - TNSTC

போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் ஏற்கெனவே துவங்கப்பட்டுள்ளன எனவும், இந்த விவகாரம் தொடர்பாக அரசு உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்றும் சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் வலியுறுத்தியுள்ளார்.

சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார்
சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 6:56 PM IST

Updated : Nov 12, 2024, 10:54 PM IST

சென்னை: அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் மிக முக்கியமான சேவைத் துறையாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.

இதனைத் தாெடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்பது தான் தொழிற்சங்கங்களின் முடிவாகும். போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே தனியார்மய நடவடிக்கை உள்ளிட்ட சில நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. தீபாவளி காலத்தில் தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டது.

சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், தற்பொழுது தனியார் பேருந்துகளை எடுத்து ஓட்ட வேண்டிய தேவையில்லை என்பது தொழிற்சங்கத்தின் கருத்தாகும்.

தனியார் பேருந்து, அரசுப் பேருந்து எதுவாக இருந்தாலும் முழுக் கொள்ளவோடு பயணிகள் ஏற்றப்பட்டு இயக்கப்பட்டால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.30 வருவாய் கிடைக்கும். அது பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கப்படுகிறது.

எனவே, தனியார் பேருந்துகள் ரூ.30 போதாது. ஆதலால், கிலோ மீட்டருக்கு ரூ.51 கேட்டனர். அரசு ரூ.51 கொடுத்து எடுத்துள்ளது. அரசு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கூறுவது, ஒரு கிலோ மீட்டருக்கு வரவு ரூ.30, செலவு ரூ.50க்கு மேல் ஆகிறது.

இதனால் தினமும் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகம் தினமும் 80 லட்சம் கிலோ மீட்டர் ஓட்டுகிறோம். தினமும் ரூ.16 கோடி இழப்பு என வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.

போக்குவரத்துக் கழகத்திற்கு அரசாங்கம் முறையாக பணம் கொடுக்காததால் தான் இந்த கடன் பிரச்சனை வந்துள்ளது. பணம் கொடுத்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கொடுக்காமல் மாற்று ஆலோசனையை நாடுகிறது.

இதையும் படிங்க : சென்னை மழை: மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

அரசாங்கம் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும், செலவிற்கும் இடையேயான தொகையை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை எடுத்து செலவு செய்து விட்டனர். இதனால் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்கள் பணிக்காலத்தில் சேமித்த வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை வழங்கப்படுவதில்லை.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அகவிலைப்படி நிதி நெருக்கடியை காரணமாக கூறி மறுக்கப்பட்டுள்ளது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டாக ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்படவில்லை. போக்குவரத்துக் கழகத்தில் 25,000 இடங்கள் காலியாக உள்ளது. அதனை அரசு பூர்த்தி செய்யவில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாணையில் 12 ஆயிரம் காலிப்பணியிடம் உள்ளது. அதில், 25 சதவீதம் இடம் மட்டும் பூர்த்தி செய்வதாக கூறப்பட்டுள்ளது. 25 ஆயிரம் காலிப்பணியிடம் இருக்கும் போது அனைத்துப் பேருந்துகளையும் இயக்க முடியும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட 8 அரசாணை தான் காரணமாகும். ஏற்கனவே 23 ஆயிரம் பேருந்துகள் ஓடிய நிலையில், இப்போது 19 ஆயிரம் பேருந்துகளே ஓடுகின்றன. இந்த துறையை வலுப்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2017ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

தற்பொழுது 1 கோடியே 75 லட்சமாக குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது. தற்பொழுது ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் தான் உள்ளனர். அதிமுக ஆட்சியில் போட்ட 8 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக ஆட்சி வந்தவுடன் கூறினோம்.

இந்தியாவிலேயே கடந்த 2013ம் ஆண்டிற்கு பின்னர் பென்சன் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசிடம் வழங்க உள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். 3வது வாரத்தில் இருந்து போராட்டம் துவங்கும். எடுத்த உடனேயே வேலை நிறுத்தம் இருக்காது. படிப்படியாகத்தான் நடைபெறும்.

அரசு உடனடியாக பேச்சுவார்த்தை துவக்க வேண்டும். அரசு காலதாமதம் செய்வதன் காரணமாகவே பண்டிகை நேரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. நாங்களாகவே திட்டமிட்டு தீபாவளி, பொங்கல் நேரத்தில் வேலை நிறுத்தம் செய்யவில்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 12, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.