ETV Bharat / state

"தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு இதுதான் காரணம்" -அமைச்சர் பெருமிதம்! - MINISTER MA SUBRAMANIAN

தமிழ்நாட்டில் மருத்துவத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து செயல்படுவது தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Ma.Subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 7:05 PM IST

கோயம்புத்தூர்: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரூ.30 கோடி மதிப்பில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 என்ற புற்றுநோய் சிகிச்சைக்கான புதிதாகக் கருவியை அறிமுகப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அக்கருவியின் பயன்பாட்டைத் துவக்கி வைத்து, அக்கருவி குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அந்த வகையில், தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக பயனாளர்களை இந்த மருத்துவமனை பயனடைய செய்துள்ளனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், இதுபோல அரசு மருத்துவமனையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து செயல்படுவதால் தான் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் உட்பட தமிழக அரசின் பல்வேறு மருத்துவ திட்டங்கள் குறித்து வெளிநாடுகளில் எடுத்துரைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் மிகப்பெரிய சாதனையை செய்து கொண்டிருக்கிறது என அண்மையில் நியூயார்க் நகரின் பொது சபை கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மக்களுக்கு இலவசங்களை வழங்குவதைவிட திட்டங்களை கொண்டு வர வேண்டும்".. வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!

இது மட்டும் அல்லாது, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமும் ஆயிரக்கணக்கான முகாம்கள் நடத்தப்பட்டு, 18 வயது நிரம்பிய நபர்களுக்கு புற்றுநோய் குறித்த சோதனை செய்து வருகிறோம். இதன் மூலமாக, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஓராண்டில் 109 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பியவர்களுக்கு புற்றுநோய் குறித்த சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் பயனாளிகளுக்கு கூடுதல் நிதி உதவி அளிப்பதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பித்தவுடன் அது நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து வந்த அமைச்சரிடம் மூதாட்டி ஒருவர் அவரது கணவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வருவதாகவும், அந்த சிகிச்சையை அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரும்படி கோரிக்கை மனுவை அளித்தார். அவரது மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், அவரது மனுமீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த மூதாட்டியை தன்னுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.