காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள அத்திவரதர் வைபவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், காவல் துறை டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் நகரில் குடிநீர் சுகாதாரம், போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், தொலைதூரத்திலிருந்து அத்திவரதரை தரிசிக்கவரும் பக்தர்களின் தேவையை கருத்தில்கொண்டு அன்னதானம் வழங்குவதற்காக முதலமைச்சர் பழனிசாமி தனது சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களும் பணமாகவோ, காசோலையாகவோ நிதி வழங்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.