ETV Bharat / state

தசராவை கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள் - Dussehra

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில தொழிலாளர்கள் தசரா விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தசராவை காஞ்சிபுரத்தில் கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள்

author img

By

Published : Oct 6, 2022, 7:02 AM IST

காஞ்சிபுரம்: தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வட மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னை துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி, முருகர் மற்றும் விநாயகர் ஆகிய சிலைகள் அமைத்து ஒன்பது நாட்கள் நவராத்திரி பூஜை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பத்தாம் நாளான நேற்று (அக் 5) விஜயதசமியை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் தசரா ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தசராவை காஞ்சிபுரத்தில் கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள்

இதில் அன்னை துர்கா தேவி, லட்சுமி, சரஸ்வதி, முருகர், விநாயகர் ஆகிய உருவ சிலைகளை ஸ்ரீபெரும்புதூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் கரைத்து வணங்கினர். இந்த ஊர்வலத்தின்போது வடமாநில இளைஞர்கள் மற்றும் பெண்கள் வண்ண வண்ண கலர் பொடியால் முகத்தில் மாறி மாறி பூசிக்கொண்டும், மேல தாளங்களோடு ஆட்டம் ஆடியும், வானவேடிக்கையோடு வெடி வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்ரீபெரும்புதூரின் முக்கிய வீதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாய்பாபா மகா சமாதியை அடைந்த தினம் - சீரடியில் பக்தர்கள் தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.