தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இந்தத் தம்பதியினர் காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
திருமண மாலையுடன் அவர்கள் வாக்களித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.