காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜன் எனபவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர் . சோதனையில் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: நீங்கள் வானதிக்கு வாக்களித்தால் 'சும்மா கிழி கிழி கிழி!' - கலா மாஸ்டர் கலகல...!