ETV Bharat / state

2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் வீட்டில் கரோனா பாதிப்பு என்கிறதா நகராட்சி?

காஞ்சிபுரம்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வீட்டில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வீட்டின் முன்பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Municipality Corona Precautions In Kancheepuram

author img

By

Published : Aug 15, 2020, 2:05 AM IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகரில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒரு வீட்டின் முன்பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும், யாரும் வசிக்காத வீட்டில் வெப்பநிலை பரிசோதனை செய்ததாக நகராட்சி தற்காலிக ஊழியர்கள் சுவரில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் காஞ்சிபுரம் நகராட்சியில் வேறொரு பகுதியில் வசிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யாருமே இல்லாத வீட்டினில் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்படும் ஒரு வீட்டிற்கு மெட்டல் ஷீட் அடிக்க 14 நாள்களுக்கு 8 ஆயிரம் என ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. யாருமே வசிக்காத வீட்டில் மெட்டல் சீட் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

பணிக்குச் சென்றால் மட்டுமே ஊதியம் என்கின்ற நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், நகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக பலரும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட வீட்டில்தான் வசித்து வருகிறார் என்பதனை கள ஆய்வு செய்த பிறகே அவ்வீட்டில் மெட்டல் சீட் வைத்தோம். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்த பிறகு தனிமைப்படுத்திக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வர இருக்கிறார்.

கரோனா நோயாளி அப்பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் இதுமாதிரியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.