ETV Bharat / state

கோயிலில் இப்படியா? - சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!

உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் சன்னதியில் நின்றுகொண்டு மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி
ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி
author img

By

Published : Dec 27, 2021, 7:09 PM IST

காஞ்சிபுரம்: மீனாட்சி லேகி தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியக் கோயில்களில் ஆய்வுமேற்கொண்டும் சாமி தரிசனம் செய்தும் வருகிறார். அந்தவகையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆய்வுமேற்கொண்டார். பிரசித்திப் பெற்ற கைலாசநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அங்குள்ள கலை சிற்பங்களைக் கண்டு ரசித்தார்.

மீனாட்சி லேகி சாமி தரிசனம்

அதன்பின் உலகப் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின் தேவராஜப் பெருமாள் சன்னதி முன் மீனாட்சி லேகி, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், கோயில் தலைமை அர்ச்சகர்கள், பாஜக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படத்தில் தேவராஜப் பெருமாள் முழுவதுமாகத் தெரியும் வகையில் உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் மூலஸ்தானம், கருவறையில் பொதுமக்கள், பக்தர்கள் என யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் மீனாட்சி லேகி புகைப்படம் எடுத்துக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Sterlite protest: தூத்துக்குடி முன்னாள் எஸ்பி ஒரு நபர் ஆணையத்தில் மீண்டும் ஆஜர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.