காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார். குறிப்பாக அவர் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, சிவபுரம், காஞ்சிபுரம் தாலுகா உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், வாழை மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான 'போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' திட்டம் நிறுத்தப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
வரதராஜபுரத்தில் நீர் தேங்காமல் இருக்க ரூ. 71 கோடி மதிப்பில் கால்வாய்கள் அமைக்கப்படும். தற்போது மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி: விவசாயிகள் வேதனை!