ETV Bharat / state

குடிமராமத்து பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் பெஞ்சமின் - Minister Benjamin

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சித்தேரி பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் பெஞ்சமின்
author img

By

Published : Aug 24, 2019, 9:54 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சித்தேரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ. 24.77 லட்சம் நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி, மழை நீர் சேமிப்புக்கான பராமரிப்புப் பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதனடிப்படையில்தான் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.

குடிமராமத்து பணிகளை தொடங்கி வைக்கும் அமைச்சர்

இதற்கு முன்னதாக அரசு அலுவலர்கள் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி செலவு செய்வதாகவும், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும் அமைச்சரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி பகுதிக்கு உட்பட்ட சித்தெரியை தமிழக முதல்வரின் 2019-2020 குடிமராமத்து திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் சித்தெரி ஏரியை புனரமைக்க ரூ.24.77 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியின் கரையை பலப்படுத்துதல், ஏரியின் பாசன மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், வடிகால் வாரியை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்
மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். Body:இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி, மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சியை துவக்கிவைத்த பின் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்களது பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து தராமல் நிலங்களை பாதுகாக்க அரசு வீண் செலவுகளை செய்ய அரசு அதிகாரிகள் முன் வந்துள்ளதை கண்டித்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன் குளங்களையும், ஏரிகளையும் தூர்வாரி, மழை நீர் சேமிப்புக்கான பராமரிக்கும் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
Conclusion:முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த அம்மா திட்டமுகாம் செயல்படாமல் தற்போது முதல்வரின் 110வீதியின் கீழ் அறிவித்த மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் சார்பில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர் என்ற கேள்விக்கு அம்மா குறைதீர்ப்பு முகாம் என்பதை பற்றி விளகம் அளிக்காமல் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் என்று சென்னதையே திரும்ப சொல்லி தப்பித்து கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.