ETV Bharat / state

காஞ்சிபுரம்: 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி - kancheepuram mini moraton

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது

தேர்தல் விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி
author img

By

Published : Mar 13, 2021, 3:39 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைப்பெறவுள்ளது. இதில் '100 விழுக்காடு அனைவரும் வாக்களிக்க வைக்கவேண்டும்' என்பதை முன்னிறுத்தி, பல்வேறு துறைகள் சார்பாக, தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், பள்ளி , கல்லூரி மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 1,500 பேர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்: 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

இத்தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை, மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் பங்குபெற்றவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய ஆஸ்பிடல் சாலை, இந்திராகாந்தி சாலை, காமராஜர் சாலை, மேட்டுத்தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஓடினர். போட்டியானது இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது.

இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பரிசுகளை வழங்கினார். பரிசுவழங்கும் நிகழ்வில் பேசிய அவர், விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயிலில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் பணி வழங்கும் விவகாரம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.