ETV Bharat / state

பஞ்சமி நில மீட்புப் போராளிகள் வாழும் நினைவுத் தூண்! - Memorial pillar for John Thomas, Esquire

காஞ்சிபுரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டது.

காஞ்சிபுரத்தில் தொல் திருமாவளவன் பேட்டி
author img

By

Published : Oct 21, 2019, 10:08 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

காஞ்சிபுரத்தில் தொல். திருமாவளவன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் திமுக, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாடு அரசானது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தது போல மீண்டும் பஞ்சமி நில மீட்பு குழு அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த நினைவுத் தூண் திறப்பு விழாவில் பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதையும் படியுங்க: 'முரசொலி நில ஆதாரத்தைக் காட்டினால் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத் தயாரா?' - ஸ்டாலின் மீண்டும் சவால்

Intro:மாமல்லபுரம் அருகே இன்று பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த ஜான் தாமஸ் ஏழுமலை ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவுத்தூண் இன்று நிறுவப்பட்டது இதனை அக்கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்

Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகள் ஜான் தாமஸ் ஏழுமலை அவர்களின் நினைவாக நினைவுத்தூண் புதியதாக நிறுவப்பட்டது இதனை அக்கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு திறந்துவைத்து உரையாடினார்

இருவரும் ஒன்றாக உயிர் நீத்து இன்று பல பேருக்கு மரமாக நின்று நிழல் தரும் வகையில் குடை போல் நிற்பது இந்த துணி விளக்கமாகும் என கூறினார் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் திமுக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிகப்படியான வாக்குகள் அப்பகுதி மக்கள் செலுத்தவேண்டும் பெருவாரியான வாக்குகள் வாங்கி வெற்றி பெற செய்ய வேண்டும் என அவரது வேண்டுகோளாக விடுத்தார் பிறகு தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகப்படியான டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருவதாகவும் அதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்ச நிலங்களை மீட்டெடுப்பதற்கு தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் திமுக ஆட்சியில் இருந்த பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் குழு அமைந்ததாகும் தற்போது ஆட்சி நடத்தும் அதிமுக ஆட்சியில் அதை கலைக்கப்பட்டது எனவும் அதற்காக மீண்டும் பஞ்சமி நில மீட்பு குழு அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Conclusion:இந்த நினைவுத் தூண் திறப்பு விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.