ETV Bharat / state

மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் - நோய் தொற்று அபாயம் - News today

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கரோனா பெட்கவர், மருத்துவ கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

Medical waste
Medical waste
author img

By

Published : May 1, 2021, 6:31 AM IST

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே உபயோகப்படுத்திய கரோனா உடைகள், மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கின்றன.

மேலும் நோயாளிகள் பயன்படுத்திய பெட் கவர், முகக்கவசம் ஆகியவற்றை மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது. ஜன்னல் வழியாக வெளியே போடுகின்றனர். அப்படி கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் அகற்றாததால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குப்பைகள் கழிவுநீரில் கலப்பதால், கொசு மற்றும் புழுக்கள் மண்டி கிடக்கிறது.

இதுமட்டுமின்றி இதை அகற்றாமல் இரவு நேரங்களில் தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

இது குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.