ETV Bharat / state

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழு அம்ச திட்டங்கள் - கமல் ஹாசன் அறிவிப்பு - Makkal Needhi Maiam Chief Kamal Hassan makes seven promises in the view of Tamil Nadu Assembly Election

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழு அம்ச திட்டங்களை அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று (டிச.21) அறிவித்தார்.

Makkal Needhi Maiam Chief Kamal Hassan
Makkal Needhi Maiam Chief Kamal Hassan
author img

By

Published : Dec 21, 2020, 3:07 PM IST

காஞ்சிபுரம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற வாசகத்தை முன்னிறுத்தி, காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இன்று அம்மாவட்டத்தின் காந்தி ரோடுப் பகுதியிலுள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழ்நாட்டை சீரமைப்போம் என்பதில் பலவற்றை சீரமைக்க வேண்டும். அதில் பொருளாதார புரட்சியும் உள்ளடங்கும். அதனால் ஏழு அம்ச திட்டங்களை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவிக்கிறோம்.

மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசு சேவைகள் அனைத்தும் அவர்களுக்கு செய்யும் தானமாக இல்லாமல் மக்களின் உரிமையாக இருக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு

1.சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்:

மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல், அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.

2. மின்னணு இல்லங்களாக மாற்றுதல்:

குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும், தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்திலும் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

3.நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்:

தமிழ்நாடு மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் இந்த நவீன கிராமங்கள் அமையும்.

4.தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்துதல்:

பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

5. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:

வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களைப் பற்றிய கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

6. துரித நிர்வாகம்:

சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை பேப்பர்களே இல்லாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக்கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகம் அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்தி லஞ்சமே இல்லாமால் இருக்கும் வகையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

7. இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப் புரட்சியை உருவாக்குதல்:

இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் " என அறிவித்தார்.

டார்ச்லைட் சின்னம் கோரி நடவடிக்கை:

மேலும், "எங்களின் கட்சி சின்னமாக டார்ச்லைட் வழங்கக் கோரி நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் உரிமைக்காக தேவைப்பட்டால் போராடுவோம் அல்லது மனு கொடுப்போம். தலைமை நேர்மையாக இருந்தால் அனைத்தும் நேர்மையாக இருக்கும். மக்களை, அரசை வழி நடத்திடும் தலைவர் நேர்மையாக இருந்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியும்." எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மௌரியா, மாநில செயலாளர் எஸ்.பி.கே.பி.கோபிநாத், பணி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர்.சந்தோஷ்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

இதையும் படிங்க: தடம் பதித்ததுமில்லை, தடம் பதிக்கப் போவதுமில்லை - கமலைச் சீண்டும் கடம்பூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.