காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அக். 11, 12 ,13 ஆகிய மூன்று தினங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கை குறித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் மாமல்லபுரத்தை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. புல் பதித்தல், தார் சாலை அமைத்தல், வழித்தடங்களில் நடைபாதைகள் பதித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. பிரதமர் வருவதற்கு இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ளதால் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்களுக்கு கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது மேலும், பிரதமர் வருகையன்று அதிகப்படியான பொதுமக்கள் வர உள்ளதால் அதற்கான தங்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்கலாமே: மாமல்லபுரத்தில் மது விருந்து: 7 இளம்பெண்கள் உட்பட 160 பேர் கைது