தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பு குறித்து இன்று (டிசம்பர் 3) வெளியிட்டுள்ளார். அதில், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து சமூகவலைதளத்தில் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், மாவட்ட இணை செயலாளர் ரஜினி பாபு தலைமையில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் குவிந்த ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் காந்திரோடு சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது ரஜினியை வாழ்த்தியும் ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர்.