காஞ்சிபுரம்: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், இன்று (டிச.10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் தாலுகா பகுதிகளில் மட்டும் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வர்தமான் நகர், சத்யா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்த் அவென்யூ மற்றும் டெம்பிள் சிட்டி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து குளம்போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளிலும், வீடுகளிலும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளின் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. எனவே காவல் துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்துறை ஆகிய துறைகளின் ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அறுந்து விழுந்த மின்கம்பி - சென்னையில் மாடு உட்பட 4 விலங்குகள் பலி