உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல கட்டங்களாக பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அதில் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைக்கு தேவையான கரோனா நோய் தடுப்பு சிகிச்சை உபகரணங்களை வாங்க காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் தொகுதி மக்களுக்காக 50 லட்சம் ரூபாய் பரிந்துரை கடிதத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்