காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவச் சிகிச்சைப் பிரிவை, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
இம்மையத்தில் 187 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 101 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 86 பேர் சித்த மருத்துவப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இம்மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு நீராவி பிடிக்கும் கருவி இல்லை எனத் தெரிய வந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மின்சாரத்தால் இயங்கக்கூடிய 50 நீராவி பிடிக்கும் கருவிகளை சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு இன்று (மே.29) வழங்கினார்.
இதனை சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி, சித்த மருத்துவர்கள் முத்துக்குமார், பார்வதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஆர்.கல்பனா, வெற்றி ஐ.ஏ.எஸ்.அகாதெமி இயக்குநர் ரூசோ, குடியிருப்பு மருத்துவ அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.