காஞ்சிபுரம் தேரடி மசூதியில் தங்கியிருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 16 பேரில் ஒருவருக்கும், டெல்லி தப்லீகி ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்த சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று - சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!