ETV Bharat / state

காதலன் கழுத்தில் கத்தி வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. போலீசார் விசாரணை.. - போக்சோ

காஞ்சிபுரம் அருகே காதலன் கழுத்தில் கத்தி வைத்து, கல்லூரி மாணவியை முட்புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
author img

By

Published : Jan 13, 2023, 6:33 PM IST

காஞ்சிபுரம்: தனியார் கல்லூரியில் படிக்கும் காதலியை வெளியே அழைத்துச் சென்ற இளைஞர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காலிமனை விற்பனை பகுதியில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரத்தில் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டு இருந்த நிலையில், அந்த வழியாக மது போதையில் சென்ற மர்ம நபர்கள், ஜோடியை பின் தொடர்ந்து கேலி கிண்டல்கள் செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காதல் ஜோடியை வம்புக்கு இழுத்து மது போதையில் இருந்த 4 பேரும், தகாத முறையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சம்பவம் குறித்து தட்டிக் கேட்ட இளைஞரையும் மர்ம கும்பல் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போதிய ஆள்நடமாட்டம் இல்லாத சூழல் காணப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அத்துமீறிய மது போதை கும்பல், காதல் ஜோடியை பலவந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இளைஞரின் கழுத்தில் கத்தியை வைத்து அராஜக முறையில் ஈடுபட்டதாகவும், கல்லூரி பெண்ணை பலவந்தமாக அருகில் இருந்த முட்புதருக்கு மர்ம நபர்கள் தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இளம்பெண்ணை 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியுள்ளனர். கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது இளைஞன் தவித்த நிலையில், மது போதை நபர்கள் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தன் பேரில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஆளுநர் உரையன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை" - முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.