காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட மொத்தம் 51 வார்டுகளில் அரசு சார்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான சதாவரம் சாலையானது ரூ. 6 கோடியே 50 லட்சம் செலவில் அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது.
இந்த சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று (பிப்.25) பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவருடன் மாவட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சீர்காழியில் சாலை அமைக்கும் பணி: தொடங்கிவைத்த எம்எம்ஏ பி.வி. பாரதி