காஞ்சிபுரம்: நேற்று (ஜூன்17) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு சென்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஏராளமானோர் அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவிக்கும் விதமாக பொன்னேரிக்கரையில் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜூ, காஞ்சிபுரம் மாநகர அதிமுக பகுதி செயலாளர் பாலாஜி, அதிமுக நிர்வாகிகள் கோல்ட் ரவி, கோல்ட் மோகன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர்ச்செண்டு மற்றும் சால்வைகளைக் கொடுத்தனர். மேலும், அங்கு திரண்டிருந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று வாழ்த்தி கோஷங்கள் எழ்ப்பினர்.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என்று ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தங்களின் முழு ஆதரவு என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். இது சற்றே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஒற்றைத்தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்' - ஜெயக்குமார்