ETV Bharat / state

டீ போட்டுக் கொடுத்தும் பூரி சுட்டு கொடுத்தும் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

author img

By

Published : Apr 2, 2021, 5:22 PM IST

Updated : Apr 2, 2021, 7:37 PM IST

காஞ்சிபுரம்: சட்டப்பேரவைத் தொகுதியில், சிறு குறு வியாபாரியிடம் சென்று டீ போட்டுக் கொடுத்தும், பூரி சுட்டுக் கொடுத்தும் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பரப்புரை
டீ போட்டுக் கொடுத்தும் பூரி சுட்டு கொடுத்தும் அதிமுக கூட்டணி பா.ம.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத்தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் போட்டியிடுகிறார். அதையொட்டி பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவ்வகையில் இன்று (ஏப்.2) காஞ்சிபுரத்தில் உள்ள 51 வார்டுகளில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஓர் பகுதியாக ஏகம்பரநாதர் சந்நிதி தெரு, சாலை தெரு, பூக்கடை சத்திரம், ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்டப் பல பகுதிகளில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார், வீதி வீதியாகச் சென்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, தேர்தல் அறிக்கையை விளக்கிக்கூறியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டீ போட்டுக் கொடுத்தும் பூரி சுட்டுக் கொடுத்தும் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

பின்னர் வாக்கு சேகரிப்பின்போது அப்பளம் சுடும் தொழிலாளர்களிடமும், சிறு குறு வியாபாரியிடம் சென்று டீ போட்டுக் கொடுத்தும், பூரி சுட்டுக்கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: செய்முறைத் தேர்வு முடிந்ததும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை

Last Updated : Apr 2, 2021, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.