ETV Bharat / state

அத்திவரதரை மூன்று லட்சம் பேர் வரை தரிசிக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: விடுமுறை தினம் என்பதால் இன்று சுமார் மூன்று லட்சம் பேர் அத்திரவரதரை தரிசனம் மேற்கொள்ளும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 28, 2019, 6:21 PM IST

kancheepuram

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றுவருகிறது. நேற்று வரை 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இன்று ஏகாதசி மற்றும் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, “இன்று ஏகாதசி என்பதால் அதிகப்படியான மக்கள் அத்திரவரதரை தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர். ஒரு மணி நிலவரப்படி 1.30 லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். 2 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள்வரை சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. பக்தர்கள் சோர்வு மற்றும் உபாதைகள் குறித்து கண்காணிக்க 34 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்களால் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு வசதியாக 240 கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

ஒன்றாம் தேதி முதல் முதல் வடக்கு மாட வீதி மற்றும் பெரிய தோட்டம் ஆகிய இரண்டு பகுதிகளில் கூடுதல் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு சுமார் 16 ஆயிரத்து 20 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இன்று இதுவரை 33 பேர் உடல் சோர்வு காரணமாக மயக்கம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Intro:காஞ்சிபுரம் 28.07.2019

விடுமுறை தினம் என்பதால் இன்று சுமார் மூன்று லட்சம் பேர் சாமி தரிசனம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டு செய்யப்பட்டு கண்காணிக்கபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளரிடம் தெரிவித்தார்..

.Body:புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஆதி அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருகிறது..
அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.. நேற்று வரை 38 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர்.. நேற்று சனிக்கிழமை விடுமுறை நாளானதால் அதிகப்படியான கூட்டம் வருகை தந்தாலும் இரவு தரிசனத்துக்குப் பின் சுமார் 10 ஆயிரம் பேர் கோயில் வளாகத்தில் உள்ள நிழற்கூடத்தில் தங்கவைக்கப்பட்டு காலை சாமி தரிசனம் மேற்கொண்டனர்... இந்நிலையில் இன்று ஏகாதேசி என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள குவிந்தனர்.. இந்நிலையில் காஞ்சி அண்ணா நினைவு இல்லத்தை அருகே 15க்கும் மேற்பட்டோர் மயக்கமுற்ற நிலையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது இன்று ஏகாதேசி என்பதால் அதிகப்படியான மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள கூடியுள்ளனர் ..ஒரு மணி நிலவரப்படி 1.30 லட்சம் பேர் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் அனைத்து பணிகளும் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்... மேலும் பக்தர்கள் சோர்வு மற்றும் உபாதைகள் குறித்து கண்காணிக்க 34 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்களால் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.. மேலும் பொது மக்களுக்கு வசதியாக 240 கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் ஒன்றாம் தேதி முதல் முதல் வடக்கு மாட வீதி மற்றும் பெரிய தோட்டம் ஆகிய இரண்டு பகுதியில் கூடுதல் நிழற் கூடங்கள் அமைக்கப் பட்டு சுமார் 16 ஆயிரத்து 20 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் , இன்று இதுவரை 33 பேர் உடல் சோர்வு காரணமாக மயக்கம் அடைந்ததாகவும் அவர்களுக்கு தேவையான முதலுதவி அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் பக்தர்களுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து தர தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதால் அனைத்து பணிகளையும் அலுவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்... .Conclusion:இந்நிகழ்வின்போது அத்தி வரத வைபவ கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்..

பேட்டி -- பா.பொன்னையா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.