சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், உலக பிரசித்தி பெற்றதுமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி இன்று அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கொடிமரத்தின் அருகே லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் எழுந்தருளிய காமாட்சி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
13 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காமாட்சியம்மன் காலை, மாலை என இருவேளைகளில் சிம்ம வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகனம், ரிஷப வாகனம், தங்க மான் வாகனம் என பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் ராஜவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதையும் படிங்க: 'எங்களின் வாழ்வாதரம் காக்க தொழிலை வரைமுறைப்படுத்துங்கள்' - செங்கல் சூளை தொழிலாளிகள் கோரிக்கை